பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களினது விண்ணப்பங்கள் சமீப காலமாக வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் தரவுகளை வெளிப்படுத்துமாறு அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் லோர்ட் நசபி நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் பரோன்ஸ் வில்லியம்ஸ் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு விண்ணபிக்கப்பட்ட 988 பேரில் 124 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2008 ஆம் ஆண்டு 1473, விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றதுடன் 1115,1357 மற்றும் 1756 விண்ணப்பங்கள் 2011 ஆம் ஆண்டு வரை கிடைக்க பெற்றதாக அமைச்சர் பரோன்ஸ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு அந்த விண்ணப்பங்கள் 961 ஆக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு 845 விண்ணப்பங்களும், 2017 ஆம் ஆண்டு 687 விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.