ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக பட்டியலிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புலிகள் உட்பட 20 அமைப்புக்கள் பயங்கரவாத அமைப்புக்களாக இனம் காணப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே இது சாத்தியமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தீவிரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் மூலம் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு குறிப்பிடத்தக்க தாக்கம் ஒன்று ஏற்படவில்லை.

அதேவேளை, கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த தடை மீது ஐரோப்பிய நீதிமன்றம் ஒன்று தளர்வுகளை ஏற்படுத்தியிருந்தபோதும், அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மேன்முறையீடொன்றையும் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.