முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க செயலணியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள, அவர் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றியுள்ளார். இந்த சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட மகளிர் அமைப்புகளின் இணையத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றதுடன் அதில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு அரசாங்கத்தை பாதிக்காது எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு குறிப்பிட்டுள்ளார்.