தொற்றா நோய்கள் தொடர்பான சார்க் நாடுகளின் முதலாவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நேற்று ஆரம்பமானது.

தொற்றா நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கொள்கைகளை அமுல்படுத்தல் மற்றும் சார்க் நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த மாநாடு இன்றையதினமும் நடைபெறுகின்றது. 2030 ஆம் ஆண்டளவில் தொற்றா நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதை இலக்காகக் கொண்ட செயற்றிட்டமொன்று உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை ஆரம்பித்துள்ள திட்டத்தை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளதுடன், அது ஏனைய நாடுகளுக்கும் எடுத்துக்காட்டு எனவும் கூறியுள்ளது.