Header image alt text

தொற்றா நோய்கள் தொடர்பான சார்க் நாடுகளின் முதலாவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நேற்று ஆரம்பமானது.

தொற்றா நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கொள்கைகளை அமுல்படுத்தல் மற்றும் சார்க் நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது. Read more

புதிய தேசிய வருமான வரி சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதன் மூலம் இலங்கையின் வரிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த திருத்தத்தின் மூலம் புதிய வரிமுறைகளும் அறிமுகம் செய்யப்படுகின்ற அதேவேளை, பல துறைகள் சார்ந்த வரிமுறைகளிலம் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வரி தொடர்பான ஆவணம் ஒன்று பேணப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகிய பொதுமக்களின் அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மே மாதம் தொடக்கம் இந்த உதவித் திட்டங்களை செயற்படுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார். Read more