Header image alt text

தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியும், இனவெறிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தவருமான வின்னி மண்டேலா தனது 81 வயதில் காலமானதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலாக போராடிய நெல்சன் மண்டேலா, தனது 27 வருட சிறைவாசத்தின் பின்னர் வெளியே வந்தபோது அவருடன் இணைந்து வின்னி பேராட்டங்களில் ஈடுபட்டார். Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மத்தல விமான நிலையம் ஊடாக டுபாய் செல்லவிருந்த விமானமொன்றில் பறவையொன்று மோதுண்டதில் மத்தல விமான நிலையத்தில் குறித்த விமானம் சுமார் 5 மணித்தியாலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 113 பயணிகளுடன், மத்தல விமான நிலையத்தில் இருந்த மேலும் 55 பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக குறித்த விமானம் வருகை தந்துள்ளது. Read more

யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று கொடும்பாவி எரிப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட நாடுமுழுவதிலுமுள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். Read more

சட்டவிரோதமாக முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்தமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு இலட்ச ரூபாய் சரீரப் பிணையிலும் இவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1 இன் உடைந்த பாகங்கள் பூமியில் வீழ்ந்துள்ளன.

ஐரோப்பிய விண்வெளி மையம் கணிப்பிற்கு அமைய பீஜிங் நேரப்படி காலை 08.15 க்கு பூமியில் வீழ்ந்ததாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளி நிலையத்தின் பாகங்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தாலும், அதன் பெரும்பாலான பகுதிகள் பூமியை அடையும் முன்னரே எரிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் சில பாகங்களே பூமியின் மேற்பரப்பைத் தொடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். Read more

சீனா 2011 ஆம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையம் செயலற்றுப் போய்விட்டதாக சீனா கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி அறிவித்திருந்தது.

அதன்பின்னர் விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றிக் கொண்டிருந்த இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வரத் தொடங்கிய நிலையில் விண்வெளி நிலையத்தின் சில பாகங்கள் இன்று பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். மார்ச் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 2 ஆம் திகதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம், பூமியில் விழும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறியிருந்தது. Read more

யாழ்ப்பாணம், வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த வீட்டில் தாயும் மகளுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 58 வயதுடைய நல்லதம்பி தேவகி என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 76வயதான நல்லதம்பி செல்லம்மா படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். Read more

இந்தியாவின் புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் செல்வதற்கு, புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கடந்த மாதம் உத்தியோகப்பூர்வ விஜயமாக சென்றிருந்த,புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, மேற்படி தான் ஒரு இந்து அல்ல என்பதால், லிங்கராஜ ஆலய நிர்வாகிகள், ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். Read more

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் கடமைபுரியும் பணியாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

வேதன அதிகரிப்பு முறையில் காணப்படும் சிக்கல்களை தீர்த்து தருமாறு கோரியே விமான நிலைய ஊழியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களின் பணிப்புறக்கணிப்பினால் விமான சேவைகளுக்க எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதோடு பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வருவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கிய கட்சி என்ற வகையில், ஐ.தே.கவிற்கும் ஜனாதிபதிக்கும் டையில் நல்லதொரு உறவு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more