காணாமற்போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்பி, காணாமல் போனோரது உறவினர்களுடன் கலந்துரையாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் 390 நாட்களுக்கு அதிகமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமல் போனோரின் உறவினர்களை அவர் நேற்றையதினம் சந்தித்திருந்தார். இதன் பின்னர் தாம் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷிடம் இதற்கான அறிவுறுத்தலை விடுத்ததாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.