பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வருவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கிய கட்சி என்ற வகையில், ஐ.தே.கவிற்கும் ஜனாதிபதிக்கும் டையில் நல்லதொரு உறவு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, பிரதமருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படுமென அஜித் பி பெரேரா எச்சரித்துள்ளார். எவ்வாறெனினும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.