இந்தியாவின் புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் செல்வதற்கு, புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கடந்த மாதம் உத்தியோகப்பூர்வ விஜயமாக சென்றிருந்த,புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, மேற்படி தான் ஒரு இந்து அல்ல என்பதால், லிங்கராஜ ஆலய நிர்வாகிகள், ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்திய வெளிவிவகார செயலாளர் லலித் மான்சிங், இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.