கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மத்தல விமான நிலையம் ஊடாக டுபாய் செல்லவிருந்த விமானமொன்றில் பறவையொன்று மோதுண்டதில் மத்தல விமான நிலையத்தில் குறித்த விமானம் சுமார் 5 மணித்தியாலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 113 பயணிகளுடன், மத்தல விமான நிலையத்தில் இருந்த மேலும் 55 பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக குறித்த விமானம் வருகை தந்துள்ளது. எவ்வாறாயினும், அவ்வாறு வரும் போதே குறித்த பறவை விமானத்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்தல விமான நிலையத்தில் போதிய வசதிகள் இன்மையால் பயணிகள் மிகவும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்ததாக கூறப்படுகிறது.