Header image alt text

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை வெளிவிவகார அமைச்சின் ஊடாக நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. Read more

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துறையுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான சம்பளத்தை 10,000 அதிகரிப்பது தொடர்பில் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. Read more

அனைத்து மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யவுள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் 06ம் திகதி புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் அனைத்து மாகாண ஆளுநர்களையும் அழைத்து ஜனாதிபதி பேசியுள்ளதாகவும், அதன்படி விரைவில் இந்த மாற்றம் செய்யப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது. ஒரு ஆளுநரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டிருப்பததே இந்த மாற்றத்திற்கான காரணமாக அறியப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 1 இல் மாணவர்கள் இணைவதில் காணப்படுகின்ற வீழ்ச்சி நிலையானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியைக்காட்டுவதாக, கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இணைத்தலைவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த வலயக் கல்விப்பணிப்பாளர், கடந்த சில ஆண்டுகளாக தரம் 1 இல் மாணவர்கள் இணைவது மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. Read more

பொதுநலவாய உறுப்பு நாடுகள் என்ற அடிப்படையில் பிரித்தானியாவும், இலங்கையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளது.

21ம் நூற்றாண்டின் பொதுநலவாயம் சார்ந்த பகிரப்பட்ட சவால்களை முறியடிப்பதற்கான வளத்தை இரண்டு நாடுகளும் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த செல்வி.தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வோர் சைலட் கொலன்ட் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு எஸ்கோ நிறுவனம் கடந்த நான்கு வருட காலமாக நடைமுறைப்படுத்தி வந்த சிறுவர் பங்களிப்பு மற்றும் சிறுவர் உரிமைகளுக்காக பரிந்துரை செய்தல் திட்டங்களில் இருந்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read more

மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச உழைப்பாளர் தினத்தை மே மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அலுவலகத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று இந்த மனுவை சமர்ப்பித்துள்ளது. மே தினத்தை ஒத்திவைத்துள்ளமையானது தொழிலாளர்களின் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டு இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் தொம் பேர்ன் இதனைத் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
Read more

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான குழுவின் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குவதுடன், தெற்காசியா தொடர்பான விசேட பிரதிநிதிகளும் அதில் அடங்குவதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய சங்க பிரதி அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடரூந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வயதுடைய ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு பயணித்த தொடரூந்தில் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.