மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாளை பிரதேத்தில் நேற்றுதமுன்தினம் காணாமல் போன வயோதிப பெண் கருங்காலிச்சோலை ஆற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

பேத்தாளை விபுலானந்தா பாடசாலை வீதியைச் சேர்ந்த 85 வயதுடைய சின்னத்தம்பி நாகமுத்து என்பவர் நேற்றுமுன்தினம் காலை 09.00 மணியளவில் வீட்டில் இருந்து வெளியானவர் மதியம் வரை வீடு திரும்பாததை அடுத்து குடும்ப உறவினர்கள் தேடிவந்த நிலையில் நேற்று மதியம் கருங்காலிச்சோலை ஆற்றில் மீன் பிடிக்க சென்றவர்கள் பெண் ஒருவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவித்த தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன வயோதிப பெண்னான சின்னத்தம்பி நாகமுத்து என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.