ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்ககக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை வெளிவிவகார அமைச்சின் ஊடாக நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது. மிக் விமான கொடுக்கல் வாங்களின்போது 7.833 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.