2020ம் ஆண்டு இலங்கையை நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் தொம் பேர்ன் இதனைத் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக பிரித்தானிய அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
அத்துடன் கடந்த ஆண்டு இலங்கை, ஒட்டாவா சாசனத்தை ஏற்றுக் கொண்டிருப்பதன் ஊடாக, 2020ம் ஆண்டுக்குள் நிலக்கண்ணி வெடிகள் இல்லாத நாடாக மாறும் இலக்கை இலகுபடுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.