Header image alt text

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

வாக்களிப்புகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் பெறப்பட்டுள்ளதுடன் இந்த வாக்களிப்பில் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. Read more

தலைமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினையடுத்து துரித கதியில் செயல் பட்ட தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணாண்டோ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்றுக்காலை நடுக்குடா பகுதியில் ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

பேசாலை நடுக்குடா பகுதியில் கைவிடப்பட்ட கடற்படை முகாமில் இருந்தே குறித்த வெடிபொருட்களை தலைமன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். நடுக்குடா பகுதியில் கைவிடப்பட்ட குறித்த கடற்படை முகாமினை சோதனையிட்ட போது ரீ 56 ரக துப்பாக்கிக்கு பயண் படுத்தப்படும் உயிர் உள்ள 1,405 ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார் பொலிஸார் இது தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவுப் பகுதியில் படையினர் வசம் இருந்து விடுவிக்கப்பட்ட காணிக்குள் இருந்து 25 பராக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு மேற்கு பகுதியில், விறகு வெட்ட சென்ற நபர் ஒருவர் குறித்த குண்டுகளைக் கண்டு, முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன், பொலிஸார் குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர். 81 மோட்டார் குண்டுவகையினை சேர்ந்த குறித்த 25 பரா குண்டுகளே இவ்வாறு மீட்டு அழிக்கப்பட்டுள்ளது.

வவுனியா – வேப்பங்குளத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற 16 வயது மாணவியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி தனது பாடசாலை சீருடைகளை துவைத்து தனது சப்பாத்துக்களையும் கழுவி பின்பு மதிய உணவு உண்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அயலவர்கள் தெரிவித்தனர். Read more

அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு, ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவில் உள்ள YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள சாப் புருனோ பகுதியில் YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் காயம் அடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Read more

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் 05 பாராளுமன்ற உறுப்பினர்களும், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. நேற்றையதினம் இரவு கூடிய, கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக முடிவெடுப்பதற்காக நேற்றுக் கூடிய உயர்பீடம், பிரதமரை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 அமைச்சர்கள் வாக்களிக்க உள்ளதாக கட்சித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இன்று நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய நிறுவனங்களை பதிவுசெய்வதற்கான இலத்திரனியல் நிறுவன பதிவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து 3 தொடக்கம் 6 மாதங்களில் இறைவரித் திணைக்களம் மற்றும் தொழிலாளர் சேமலாப நிதியங்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. இருப்பினும் நிறுவனப்பதிவு இலத்திரனியல்மயமாக்கல் தொடர்பான பின்னூட்டல் காப்பு முறைமையின் செயற்பாடு மந்த நிலையில் காணப்படுகின்றமை முழு செயற்பாட்டினையும் பாதிப்பதாக அமையும். Read more