வடக்கு, கிழக்கைக் கட்டியெழுப்புவதில், அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும், காலங்கடத்தாமல், அவசர பணிகளாகச் சிலவற்றை முன்னெடுப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட, வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று சந்தித்தபோதே, இவ்வுறுதிமொழிகளை அவர் வழங்கியுள்ளார். இதன்போது, தமிழ்த் தரப்புகள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடிய பிரதமர், தாம் இதுவரை மேற்கொண்ட பணிகள் தொடர்பாகவும், அடுத்து எடுக்கப்படவிருக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் எடுத்துக் கூறியுள்ளார்.