புதிய நிறுவனங்களை பதிவுசெய்வதற்கான இலத்திரனியல் நிறுவன பதிவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து 3 தொடக்கம் 6 மாதங்களில் இறைவரித் திணைக்களம் மற்றும் தொழிலாளர் சேமலாப நிதியங்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. இருப்பினும் நிறுவனப்பதிவு இலத்திரனியல்மயமாக்கல் தொடர்பான பின்னூட்டல் காப்பு முறைமையின் செயற்பாடு மந்த நிலையில் காணப்படுகின்றமை முழு செயற்பாட்டினையும் பாதிப்பதாக அமையும். இலத்திரனியல் நிறுவன பதிவுகள் தொடர்பாக இன்று கொழும்பில் இடம்பெற்ற இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நிறுவன பதிவுத்திட்டத்தின் உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்விலே தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த தேசப்பிரிய மேற்கூறியவாறு தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.