பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

வாக்களிப்புகளின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் பெறப்பட்டுள்ளதுடன் இந்த வாக்களிப்பில் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் இன்றுகாலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்புகள் இரவு 9.30மணிக்கு ஆரம்பிக்கபட்ட தற்போது நிறைவடைந்துள்ள நிலையிலேயே நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.