Header image alt text

வடக்கு, கிழக்கைக் கட்டியெழுப்புவதில், அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும், காலங்கடத்தாமல், அவசர பணிகளாகச் சிலவற்றை முன்னெடுப்பதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட, வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று சந்தித்தபோதே, இவ்வுறுதிமொழிகளை அவர் வழங்கியுள்ளார். இதன்போது, தமிழ்த் தரப்புகள் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடிய பிரதமர், தாம் இதுவரை மேற்கொண்ட பணிகள் தொடர்பாகவும், அடுத்து எடுக்கப்படவிருக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் எடுத்துக் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் புனானை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனரென, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்றில் இருந்து பொலன்னறுவை சுங்காவில் பகுதியை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸ{ம் பொலன்னறுவை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் புனானை பிரதேசத்தில் வைத்து நேருக்கு நேர் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்வதற்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.ஆர். ஐயன்தொட்டுவ நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.

இன்றையதினம் தொடக்கம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இவ்வாறு சுற்றுப்பயணம் செய்வதற்கு, மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், தற்போது, நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டினை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Dan News

யாவரும் கேளீர்(13.03.2018)சம கால நிலைமைகள் தொடர்பில்

Gepostet von DAN News am Samstag, 31. März 2018