அமெரிக்காவில் உள்ள YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள சாப் புருனோ பகுதியில் YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் காயம் அடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, குறித்த பகுதியைச் சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.