ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இராஜினாமா செய்யப் போவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.

பதவி விலகுவதற்கான தனது இராஜினாமா கடிதத்தை அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்க உள்ளதாக அவர் கூறினார். கட்சியின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் தனது செயலாளர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அவர் அறிவித்துள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர் விரைவாக கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.

அதன்படி இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக இம்மாதம் 07 மற்றும் 08ம் திகதிகளில் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விஷேட கூட்டம் இடம்பெறவுள்ளது.