வடமராட்சி, வல்வெட்டிது;தறை கடற்கரையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்றுமாலை மீட்கப்பட்டதுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பர்மலையைச் சேர்ந்த 76 வயதுடைய துரைசிங்கம் அருந்தவம் என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் அவரும் மகளும் பேரப்பிள்ளைகளுமே இருந்தனர். நேற்றுகு; காலை 9 மணியளவில் மகள் வெளியில் சென்று வீடு திரும்பிய போது, தாயாரைக் காணவில்லை என தேடிவந்தனர். இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.