அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரை அரசாங்கத்தில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் 33 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை பிரதமருக்கு கையளித்துள்ளனர். அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சித்தல், அமைச்சரவை தீர்மானங்களை விமர்சித்தல் போன்ற அரசுக்கு எதிரான செயற்பாடுகளை இவர்கள் மேற்கொள்வதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரதியொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.