தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் சில உறுப்பினர்களை இழந்துள்ளோம், எனினும் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களுடன் தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்பதோடு, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.