Header image alt text

ஏப்பிரல், 03/2018

அதிமேதகு சந்திரிக்கா பண்டரநாயக்க அவர்கட்கு,

தேசிய நல்லிணக்க மற்றும் சகவாழ்வு செயலகம்

கனம் அம்மையார்,

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சி வரலாற்றில் புதுமையாக, நல்லாட்சி எனும் பெயரில் உருவாக்கப்பட்ட தேசிய கட்சிகளினது கூட்டாட்ச்சி, அதனை நம்பிய சிறுபான்மை மக்களினது நம்பிக்கைகளை மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றது என்பதுவே எமது அனுபவமாக அமைகின்றது. Read more

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவதற்கு சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள் சம்பந்தமான குழுவொன்று கடந்த 04ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளனர். ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டு சுமார் ஒருவருட காலத்தை நெருங்கியுள்ள நிலையில், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து அந்தக் குழுவின் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்று மாலை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமருக்க எதிராண நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர், இவ்விருவரும், முதன்முறையாகச் சந்தித்துக்கொண்ட போது, சுமார் ஒரு மணித்தியாலமாக, இவ்விருவருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தேசிய அரசாங்கத்தை, தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பில், பிரதமரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

மட்டக்களப்பு தலையமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மாமாங்கம், குமாரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டு, கத்திக்குத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட

ஆலய பூசாரிகள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற, நீதவான் எம்.கணேசராஜா நேற்று உத்தரவிட்டார். கடந்த சில மாதங்களாக குமாரபுரம் மாமாங்கம் ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே மோதல்கள் இடம் பெற்றுவருகின்றது.
Read more

முல்லைத்தீவில் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நில சுவீகரிப்பு தொடர்பிலான விஷேட அமர்வொன்று நேற்று வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றது. இதன்போது மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது. Read more

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக இவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இவர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. Read more

அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் தற்போது இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதேவேளை, தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். Read more

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் கிராமத்தில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

நெல்லூர் பாடசாலை வீதியைச் சேர்ந்த மகிழவெட்டுவான் வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கற்கும் 16 வயதான சிவலிங்கம் திஷாந்தினி என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமியின் உடல், உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.