இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவதற்கு சர்வதேச வர்த்தகம் சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள் சம்பந்தமான குழுவொன்று கடந்த 04ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளனர். ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டு சுமார் ஒருவருட காலத்தை நெருங்கியுள்ள நிலையில், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து அந்தக் குழுவின் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வரிச்சலுகையை இலங்கை மீளப் பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அமுலாக்குவதை தவறவிடக் கூடாது என்றும் அந்த குழு கூறியுள்ளது.