ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக இவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இவர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. தற்போதைய நிலையில், இவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பில் கல்கிஸ்ஸ நீதவானுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ம் ஆண்டு மே 22ம் திகதி கடத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்கின்றது.