முல்லைத்தீவில் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளனர்.
முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நில சுவீகரிப்பு தொடர்பிலான விஷேட அமர்வொன்று நேற்று வடக்கு மாகாண சபையில் இடம்பெற்றது. இதன்போது மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது. இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர மற்றும் வெலிஓயா, கிதுள் ஓயா பகுதிகளில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை எதிர்த்தே மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது