Header image alt text

மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள் 14 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே.

எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட இந்து ஆலயங்களை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.  Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச்செல்லும் பணிப்பெண்கள் கருத்தடை மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை ஒன்றை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகம் ஒன்று நேற்றையதினம் வெளியிட்ட செய்தியில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வீடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்கள், கருத்தடை மருந்துக்களை உபயோகித்ததன் பின்னரே வெளிநாடு செல்ல அனுமதிப்பர் என தெரிவித்திருந்தது. Read more

தாய்லாந்தின் மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன.

நல்லெண்ண பயணமாக இலங்கை வந்துள்ள குறித்த கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கப்பல்களில் இலங்கை மற்றும் தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் பல்வேறு பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளிப் பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கும் செல்லும் பயணிகளின் நலன்கருதி இன்று முதல் விசேட தொடரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 24 தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து தூதரப்பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக இந்த விசேட தொடரூந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

சர்வதேச அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இலங்கை படையினரை அனுப்புவதற்கு முன்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிபந்தனையை இலங்கை இராணுவம் மீறிவிட்டது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

எமது அனுமதியை பெறாமல் லெபனானிற்கு படையினர் சென்றுள்ளனர் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் தீபிக உடகம இதனை தெளிவுபடுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். Read more

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேர்முக தேர்விற்கு வருகை தரும்பொழுது உறுதிப்படுத்துவதற்கான கடிதம் அல்லது சத்தியகடதாசி கட்டாயம் எடுத்து வர வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான கடிதங்கள் தற்பொழுது வடக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. Read more

மாகாண சபை தேர்தலை ஒரே நாளில் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த நேற்று கூடிய கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பெரும்பாலானோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் இது தொடர்பான இறுதி இணக்கப்பாடு இன்னும் எட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். Read more

போதையினால் தமது கல்வி சீராழிவதாக தெரிவித்து வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்து வரும் நிலையில் பல தரப்பாலும் இதற்கு எதிராக குரல் எழுபப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயத்தின் மாணவர்கள், பாடசாலை சமூகம், பெற்றோர், சிவில் பாதுகாப்பு குழுவினர், சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு என்பன இணைந்து இன்று பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவி பர்னாண்டோ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, சதொச நிறுவனத்துக்கு சொந்தமான 39 மில்லியன் ரூபாயை, தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், பொது சொத்து கட்டளைச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாள் வெட்டுக்குழுக்களை கைதுசெய்யுமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு புன்னச்சோலை பிரதேசத்தில் சில மாதங்களாக இரு குழுக்களுக்கு இடையே வாள்வெட்டுக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வாள்வெட்டு குழுக்களை கைது செய்யமாறு கோரி அந்த பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more