வாள் வெட்டுக்குழுக்களை கைதுசெய்யுமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு புன்னச்சோலை பிரதேசத்தில் சில மாதங்களாக இரு குழுக்களுக்கு இடையே வாள்வெட்டுக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வாள்வெட்டு குழுக்களை கைது செய்யமாறு கோரி அந்த பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவங்களை அடுத்து பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே வன்செயலில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யக் கோரியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.