தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளிப் பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கும் செல்லும் பயணிகளின் நலன்கருதி இன்று முதல் விசேட தொடரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 24 தொடரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து தூதரப்பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக இந்த விசேட தொடரூந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, புதுவருடத்தை முன்னிட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நேற்று முதல் விசேட பேருந்து சேவைகளை நேற்று முதல் ஆரம்ம்பித்துள்ளது. கொழும்பிலிருந்து பல்வேறு பிரதேசங்களுக்கும் 3 ஆயிரத்து 500 பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தாலைவர் எம்.ஜீ.ஏ. ஹேமச்சந்ர தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கதினரும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் விசேட தொடரூந்து சேவைகளை ஆரம்பிக்க உள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளை இலக்காகக் கொண்டு இந்த பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையுடன் இணைந்து இப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.