Header image alt text

யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள 683 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள மேலும் 683 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

பொத்துவில் பிரதேசத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் காணப்படும் தமது காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் அடையாளப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பொத்துவில் பிரதேசத்திற்கு உட்பட்ட கோமாரி, மணந்தாபெட்டியாறு, முதுரைத்தீவு, இணப்பாளையடி ஆகிய பிரதேசங்களில் உள்ள 300 ஏக்கர் வேளாண்மைக் காணியை வனவளத் திணைக்களத்தினர் அடையாளப்படுத்தியுள்ளனர். Read more

இலங்கை மின்சார சபையின், பொறியியலாளர்கள் இரண்டு வாரங்களுக்குள் தொழிற்சங்க நவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

நீண்டகால மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில், தாம் முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து இலங்கை மின்சார சபை எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, மின்சார சபை, பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார். Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரையும் கட்சியிலிருந்து நீக்கப்போவது இல்லையெனத் தெரிவித்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர, எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சியுடன் இணைந்திருப்பதற்கு அவர்கள் கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீரக்கெட்டியவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார், Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அறிவித்துள்ளார்.

தனது பதவி இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அமைச்சர் மலிக் சமரவிக்ரம தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

இலங்கையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற துருக்கி நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ராமேஸ்வரம் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தமிழக கடலோர காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்த, தாய்லாந்து கடற்படைக்கு சொந்தமான மூன்று இராணுவ பயிற்சி கப்பல்கள் நாளை நாட்டை விட்டு புறப்பட்டு செல்லவுள்ளன.

நல்லெண்ண அடிப்படையில் இங்கு வந்துள்ள இந்த கப்பல்களை கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். இக்கப்பலின் கடற்படை பயிற்சி மாணவர்கள் பிரிவின் கட்டளைத் தளபதியும், கப்பலின் அதிகாரியும் மேற்கு பிரிவு கடற்படை தலைமையகத்தில் நிறைவேற்றுக் கட்டளைத்தளபதி ரியல்ட் அட்மிரல் நிசாந்த உலுகேதென்னவைச் சந்தித்தார்.
Read more

தமது வெளிநாட்டு கொள்கைக்கு அமைய அண்டை நாட்டுடன் சிறந்த உறவினை இந்தியா பேணி வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இந்தியா நிதியுதவி வழங்குவது நாட்டை பிடிப்பதற்காகவோ அல்லது ஆக்கிரமிப்பதற்காகவோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. ‘அயல் நாட்டிற்கு முன்னுரிமை’ என்ற தலைப்பில் இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வொன்றின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். Read more

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு அமைக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைபடமானது மே மாதம் வெளியிட்டு வைக்கப்படுமென நில அளவையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், அதனை அச்சிடுவதற்கான வேலைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படுமெனவும் நில அளவையாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.என்.பீ. உதயகாந்த குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 150 பேர் உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள தன்னார்வ மீட்பு படையினரான “தி வைட் ஹெல்மட்ஸ்” குழு, கட்டடத்தின் அடிதளத்தில் பல சடலங்கள் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more