தமது வெளிநாட்டு கொள்கைக்கு அமைய அண்டை நாட்டுடன் சிறந்த உறவினை இந்தியா பேணி வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இந்தியா நிதியுதவி வழங்குவது நாட்டை பிடிப்பதற்காகவோ அல்லது ஆக்கிரமிப்பதற்காகவோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. ‘அயல் நாட்டிற்கு முன்னுரிமை’ என்ற தலைப்பில் இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வொன்றின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். இலங்கை மற்றும் இந்திய மக்கள் நெருங்கிய சரித்திர மற்றும் கலாச்சார தொடர்பினை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல இலங்கையர்கள் மற்றும் இந்தியா உட்பட அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள், இலங்கை மண்ணில் சீனாவின் தாக்கம் கவலையை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார சந்தை, சொத்து அல்லது அதன் நிலத்தில் இந்தியா நாட்டம் கொண்டிருக்கவில்லை எனவும் இந்திய தூதுவர் உறுதிபட தெரிவித்தாக ‘த ஹந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.