பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விஷேட பஸ் சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக மேலதிகமாக 2000 பஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும் பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும் எனவும் அதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து சட்டதிட்டங்களை உரிய முறையில் பேணுவதற்கான நடவடிக்கைகள் வலுப்படத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைகளில் பணிக்கும் வாகனங்களின் வேகம் 100 மீற்றரை விட அதிகரிக்கக் கூடாது எனவும் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றரை விட குறைவாக பயணிக்கும் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.