Header image alt text

இலங்கை, சீனாவுக்கு இடையில் மிகப்பெரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுகள் முன்னெடுக்கப்படுவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இயற்கை எரிசக்தி நிலையத்தை அமைத்தல், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, சீமெந்து, உருக்கு மற்றும் இரும்பு உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை மேறகொள்வது தொடர்பில் இந்த பேச்சுகளில் அவதானம் செலுத்தியுள்ளதாக, சீனத் தூதுவர் செங் சியுவான் தெரிவித்துள்ளார். Read more

தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா விசேட அதிரடிப்படை அதிகாரி எஸ் பி சில்லெஸ்டரின் தலைமையில் முல்லைத்தீவு உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி சி ஐ ஆனந்த தலைமையில் முல்லைதீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டு ஆயுதங்களை மீட்டுள்ளனர். Read more

நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் 7 பேரையும் கண்டுபிடித்து விட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட 7 பேரும் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காணமல் போனவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தபோதே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். Read more

வேலையற்ற 20,000 பட்டதாரிகளுக்கு அரச தொழிலை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பட்டதாரிகளை அபிவிருத்தி பணியாளர்களாக இணைத்துக்கொள்வதுடன், அவர்களுக்கு 2 வருட பயிற்சியும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பயிற்சி காலத்தில் இவர்களுக்கான கொடுப்பனவை வழங்கவுள்ளதுடன், இவர்களை பிரதேசசெயலகங்களில் சேவைகளில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. Read more

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தெல்லிப்பளை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவினால், இந்த வீடுகள் திறந்துவைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொறியியளாலர்களின் பங்களிப்புடன் ஐந்து மாதங்களில் இந்த வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. Read more

எவன்காட் ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் இராணுவ கெர்னல் இந்த மாதம் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று காலி பிரதான நீதவான், நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்பிரட் விஜயதுங்க என்ற குறித்த முன்னாள் இராணுவ கெர்னல், சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கடந்த மாதம் 28 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் அமைந்திருந்த இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது வட்டுவாகல் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் முல்லைத்தீவு-பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக குறித்த முகாமை நந்திக்கடல் பகுதியில் அமைத்திருந்ததோடு உணவகம் ஒன்றினையும் அமைத்திருந்தனர். Read more

தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவத்துக்கான உட்கட்டுமான வசதிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில், எதிர்காலத்தில் துரிதமாக வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தகவல் வழங்கியுள்ளார். எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் 4 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட 683 ஏக்கர் காணிப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது. Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து படகொன்றின் மூலம் தமிழகம் சென்ற துருக்கிய நாட்டவர் ஒருவர், ராமேஸ்வரம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார். 43 வயதான மிஹிர் டெவ்ரிம் என்ற அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தீவிரவாதத் தொடர்பு இல்லாதவர் என்று தெரியவந்துள்ளது. Read more

யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்

நேற்றையதினம் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில், உள்ளூராட்சி சபை தேர்தலின் போது, நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் கைப்பற்றப்பட்ட பிரதேச சபைகளின் வெற்றி தொடர்பிலும், எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Read more