நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் 7 பேரையும் கண்டுபிடித்து விட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட 7 பேரும் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காணமல் போனவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தபோதே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணமல் போயுள்ளனர் தான் வழி தவறி சென்றுள்ளதாக குறித்த இளைஞர் குழுவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டாருக்குத் தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, வீட்டார் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் அளித்த நிலையில், பன்வில, ரங்கல, உடுதும்பர, லக்கல மற்றும் இரத்தோட்டை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் வேளையில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.