நக்கீல்ஸ் வனப்பகுதியை பார்வையிட சென்ற 7 பேர் காணாமல் போயுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. நேற்று இரவு 119 காவற்துறை அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய
ரங்கல, உடுதும்பர, ரத்தொட மற்றும் லக்கல காவற்துறையினர் இணைந்து காணாமல் போயுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போயுள்ளவர்கள் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.