முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் அமைந்திருந்த இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது வட்டுவாகல் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் முல்லைத்தீவு-பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக குறித்த முகாமை நந்திக்கடல் பகுதியில் அமைத்திருந்ததோடு உணவகம் ஒன்றினையும் அமைத்திருந்தனர். இந்த நிலையில், 9 வருடங்களின் பின்னர் இந்த கண்காணிப்பு முகாம் இராணுவத்தினரால் நேற்றையதினம் அகற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.