யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தெல்லிப்பளை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 30 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவினால், இந்த வீடுகள் திறந்துவைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொறியியளாலர்களின் பங்களிப்புடன் ஐந்து மாதங்களில் இந்த வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. வீட்டு நிர்மாணப்பணிகளுக்காக தேவையான வசதிகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.