தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா விசேட அதிரடிப்படை அதிகாரி எஸ் பி சில்லெஸ்டரின் தலைமையில் முல்லைத்தீவு உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி சி ஐ ஆனந்த தலைமையில் முல்லைதீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டு ஆயுதங்களை மீட்டுள்ளனர். 4 தண்ணீர் தாங்கிகளில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மைக்றோ பிஸ்டல் ரவைகள் 3000, கைகுண்டுகள் 34, தமிழன் கைக்குண்டு 22, மிதிவெடிகள் 48, ஆர்பிஜி எறிகணைகள் 7, ஜிபிஎம்ஜி ரவைகள் 2000, விமான எதிர்ப்பு ரவைகள் 1710, டெட்னேற்றோர்கள் 06, கிளைமோர் 04, புலிகளின் தயாரிப்பான அருள் எறிகணைகள் 34, சி4 வெடிமருந்து 48கிலோகிறாம் என்பன மீட்கப்பட்டு பாதுகாப்பாக அழிப்பதற்காக அதிரடிப்படையினரால் கொண்டுசெல்லப்பட்டன.