தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவத்துக்கான உட்கட்டுமான வசதிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் என்பவற்றின் அடிப்படையில், எதிர்காலத்தில் துரிதமாக வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தகவல் வழங்கியுள்ளார். எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் 4 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட 683 ஏக்கர் காணிப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது. தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் இந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏனைய இடங்களிலும் துரிதமாக மேலதிக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து மேலும் தெரிவித்துள்ளார்.