யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான்
நேற்றையதினம் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில், உள்ளூராட்சி சபை தேர்தலின் போது, நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் கைப்பற்றப்பட்ட பிரதேச சபைகளின் வெற்றி தொடர்பிலும், எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான மருதபாண்டி ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.