வடமாகாண அமைச்சர்கள் மீது உள்ளுர் பத்திரிகையால் முன்வைக்கப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பிரதம செயலாளர் ஊடாக விசாரணை நடத்துமாறு மாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர், முதலமைச்சருக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார். வடமாகாண அமைச்சர்கள் மீது மோசடிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று, மோசடிக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் பதவியிலிருந்து விலகியிருந்தனர். இந்நிலையில், தற்போதுள்ள அமைச்சர்கள் மோசடியில் ஈடுபடுவதாக அண்மையில் உள்ளுர் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருந்தன.இது தொடர்பிலேயே விசாரணை நடத்துமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார்.