இலங்கையர் தொடர்பில், விதிக்கப்பட்டிருந்த புதிய சட்டத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு, சவூதி அரேபியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து சவூதிக்குச் செல்லும் பணியாளர்கள் வீசா பெறும்போது, அவர்களின் மனநிலை தொடர்பான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த புதிய சட்டத்தை தற்காலிகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சவூதியின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சவூதி இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.