Header image alt text

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்,

பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் தங்களுடைய இராஜினாமாக் கடிதங்களை, ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டனரென ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு கிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் இணை அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பத்து நிபந்தனைகளுடன் எதிராக வாக்களித்தது. Read more

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் காணாமற்போன இளைஞரின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜேசுதாசன் நியூசன் என்ற தனது மகன் கடந்த 09ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தனது முறைப்பாட்டில் தாய் கூறியுள்ளார். 24 வயதுடைய தனது மகனை அனைத்து இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடிவிட்டதாகவும், எனினும் அவர் எங்கும் இல்லை என்றும் அந்த முறைப்பாட்டில் தாய் கூறியுள்ளார். Read more

புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிளிநொச்சி அறிவியல் நகரின் யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியிலேயே இவ் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று மாலை நான்கு மணி தொடக்கம் இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Read more

வட மாகாண பதில் முதலமைச்சராக கந்தையா சர்வேஸ்வரன் இன்றையதினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

கொழும்பிலுள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் ஏப்ரல் 10 ஆம் திகதியில் இருந்து 27 ஆம் திகதி வரை வெளிநாடு சென்றுள்ளமையினால் பதில் முதலமைச்சராக கந்தையா சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், 14ஆம் திகதித்து முன்னதாக மேற்கொள்ளப்படுவது அமைச்சரவை மாற்றமல்ல எனவும், புதிய அமைச்சரவையே நியமிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

கடந்த மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் விளைவால் உயிரிழந்த மூன்று நபர்களுக்கும் நட்ட ஈடுவழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி அந்த வன்முறைச் சம்பவத்தால் உயிரிழந்த ஒருவருக்கு நட்டஈடாக 500,000 ரூபா வீதம் அவர்களின் குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்ககான வேதன அதிகரிப்பை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர் லால் காந்த, எதிர்வரும் மேதினத்திற்கு பின்னர், சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியக் குறைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். Read more

அல்ஜீரிய இராணுவ விமானமொன்று விபத்துள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 200ற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்தில் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அல்ஜீரிய தலைநகருக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ விமான நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் ஒருசில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 14 அம்பியுலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பிரதேசத்தில் நேற்று இரவு பூட்டியிருந்த வீட்டை உடைத்து 21 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குமாரபுரம் கோவில் வீதியில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த 9ஆம் திகதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பசகிதமாக கண்டிக்கு சென்று நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் மாடியிலுள்ள கதவை உடைத்து அலுமாரியில் இருந்த 21 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளை போயுள்ளதை கண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். Read more