மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பிரதேசத்தில் நேற்று இரவு பூட்டியிருந்த வீட்டை உடைத்து 21 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குமாரபுரம் கோவில் வீதியில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த 9ஆம் திகதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பசகிதமாக கண்டிக்கு சென்று நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் மாடியிலுள்ள கதவை உடைத்து அலுமாரியில் இருந்த 21 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளை போயுள்ளதை கண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தங்களது விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு கொள்ளையர்களை மடக்கி பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.