கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது.

அவர்களின் சொந்த பணத்தில் செலவு செய்து அந்த கடமைகளுக்காக சென்றிருந்த போதிலும் இதுவரை அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை கவலைக்குறியது என்று அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறியுள்ளார். இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், அந்த ஆசிரியர்கள் வழங்கிய பற்றுச்சீட்டுக்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றார். இந்த நிலமையை சீரமைத்து குறித்த கொடுப்பனவுகளை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.