முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் காணாமற்போன இளைஞரின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜேசுதாசன் நியூசன் என்ற தனது மகன் கடந்த 09ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தனது முறைப்பாட்டில் தாய் கூறியுள்ளார். 24 வயதுடைய தனது மகனை அனைத்து இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடிவிட்டதாகவும், எனினும் அவர் எங்கும் இல்லை என்றும் அந்த முறைப்பாட்டில் தாய் கூறியுள்ளார். அதன்படி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.