ஹபரண – மொரகஸ்வேவ பிரதேசத்தில் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், 8 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காயமடைந்து ஹபரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் பொலன்னறுவை- கல்முனை நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாகவே விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.