Header image alt text

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது.

அவர்களின் சொந்த பணத்தில் செலவு செய்து அந்த கடமைகளுக்காக சென்றிருந்த போதிலும் இதுவரை அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை கவலைக்குறியது என்று அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறியுள்ளார். இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், Read more

ஹபரண – மொரகஸ்வேவ பிரதேசத்தில் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், 8 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காயமடைந்து ஹபரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் பொலன்னறுவை- கல்முனை நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாகவே விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு, ஏறாவூரில் கொள்ளைச் சம்பவமொன்றில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பியோடியதையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தரர்கள் இருவர், உடனடியாக சேவையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கியை அறுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர், நேற்று கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். Read more

நாட்டின் பல மாகாணங்களில் இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை இடியுடன் கூடிய மழை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மலையக பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பதிவாகக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன்போது தொலைபேசி மற்றும் மின்சார உபகரணங்கள் பாவிப்பதை தவிர்க்குமாறும், மிதிவண்டி, உழவு இயந்திரம் மற்றும் படகுகள் செலுத்துவதை தவிர்க்குமாறும் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. Read more